| Posted in புத்தகம் | Posted on 12:11 PM
நான் பொதுவாய் நிறைய புத்தகங்கள் வாங்குவதுண்டு!
சில புத்தகங்கள் மட்டும் வாங்கிய உடனேயே படித்துவிடுவேன்.
பல புத்தகங்கள் வாசிக்கப்படாமலேயே தூங்கிக்கொண்டிருக்கும்.
இன்றாவது படித்துவிட வேண்டும் என தினமும் நினைத்தாலும் கூட, சில மாதங்களுக்குப் பின்பே அந்த வாய்ப்பு கிட்டும்.
ஆனால் எனது பாட்டி (செஞ்சுரி அடிக்கப்போகிற வயசு)
இன்றும் நிறைய படிப்பார்.
நான் வாங்கி கிடப்பில் போட்டிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் அவர்தான் முதலில் படிப்பார். (சில புத்தகங்கள் விதிவிலக்கு)
எதற்கு இந்த நீண்ட முன்னுரை என்றால்,
சென்ற வாரம் வாங்கிய கேபிள் சங்கரின் புத்தகத் தலைப்பிற்கு,
என்னை மொழிபெயர்ப்பாளன் ஆக்கிய "கொடுமை" அவரையே சேரும்.
பாட்டி : என்ன பேரு இது? "லெமன் ப்ரீயும், இரண்டு ஷாப் பக்கீலாவும்?"
நான் : அது "ப" இல்ல "ட". "லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்".
பாட்டி : சரி அப்பிடீன்னா?
நான் : ம்ம்ம்ம்...... "எலுமிச்சை மரமும், இரண்டு கோப்பை மதுவும்" .
(என்ன கொடுமை சார் இது?)
(என்ன நினைத்தாரோ இதுவரை அந்த புத்தகத்தை தொடக்கூட இல்லை. ஒருவேளை "ஸீரோ டிகிரி" பாதிப்பாய்க்கூட இருக்கலாம்.)
ஒருவேளை இது சினிமா தலைப்பாக இருக்கும் பட்சத்தில், (இப்போ வேண்டாம்; இந்த விசயத்துக்கு கடைசியில் வருவோம்.)
லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
ஆசிரியர் : சங்கர் நாராயண்
பதிப்பு : நாகரத்னா பதிப்பகம்
விலை : ரூ 50௦/-
கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை, முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில், மேற்கு கே.கே.நகர், சென்னை –78
மேலதிக விபரங்களுக்கு,
கேபிள் சங்கர் : 9840332666
http://cablesankar.blogspot.com/
முதல் கதையிலேயே பிரமித்துப்போய், அதே உற்சாகத்தோடு, ஒரே மூச்சில் முழுவதும் படித்து முடித்த பின்பே கீழே வைத்தேன்.
சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, தேர்ந்த எழுத்து நடை. வாழ்த்துக்கள் சங்கர்ஜி.
புத்தகத்தை நிறைய பேர் துவச்சு, பிழிஞ்சு, கடைசியில் இஸ்திரி வேறு போட்டு விட்டதால், புதிதாய் நான் சொல்வதற்கு....,
எங்கே ஆரம்பித்து, எங்கே முடிக்க வேண்டும் என்கிற சூட்சமம் தெரிந்து வைத்திருக்கின்றார். கதையை நகர்த்தும் விதமும், வார்த்தைகளைக் கையாண்ட விதமும் அழகு.
எனக்குப்பிடித்த கதைகள்,
1. முத்தம்.
2. ஒரு காதல் கதை.. இரண்டு கிளைமாக்ஸ்.
3. ராமி, சம்பத், துப்பாக்கி.
4. போஸ்டர்.
5. லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
6. தரிசனம்.
7. காமம் கொல்.
மேலே இருப்பவை மட்டும் படிக்காமல், புத்தகத்தையும் வாங்கி (ஓசியில் அல்ல)
எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இணைய பயனாளிகள் / பதிவர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, அதிக வாசகர்களை சென்றடையும் வகையில் புத்தகமாய் அச்சில் கொண்டுவந்த கேபிளாருக்கும், பதிப்பகத்தாருக்கும், உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இப்ப நம்ம மொக்கை,
ஒருவேளை இது சினிமா தலைப்பாய் இருக்கும் பட்சத்தில்...
அல்லது செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு..
(உக்காந்து யோசிச்சது தான்...)
கே.மு.க.ம. கட்சித் தொண்டர்கள் தலைப்பை மாற்றச் சொல்லி போராட்டம் நடத்தலாம்.
கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கில் பெயர் வைத்திருப்பதாக படைப்புகளுக்கு தடை வரலாம்.
தமிழ்நாட்டில் புத்தகம் வெளியிடுவோர், கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என உத்தரவு வரலாம்.
அல்லது தமிழில் பெயர் வைப்போரின் புத்தகங்களுக்கு வரி விலக்கு / இன்ன பிற சலுகைகள் அறிவிக்கப்படலாம்.
......... இயக்கத்தின் சார்பில் ஆட்டோ வரலாம்.
போ.க.ம மகளிர் அமைப்புகள் இவருக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது என உண்ணாவிரதம் இருக்கலாம்.
எலுமிச்சை மரமும், .... -என பெயர் மாற்றம் செய்யப்படலாம்.
புதிதாய் கட்சி ஆரம்பிக்கும் வாய்ப்பு கூட வரலாம்.
சரி கேபிளுக்கு தமிழில் என்ன பேரு? (சும்மா லுல்லுல்லுலாயிக்கு!)
உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி..இன்னும் விளக்கமான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
கேபிள் சங்கர்
கண்டிப்பாய் போட்டுருவோம் தல..
about parisal when?
what abot parisal?
"டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்" தானே,
இன்னும் படித்து முடிக்க வில்லை...
பரிசல மட்டும் விட்டுடுவமா என்ன?
நல்லா எழுதுறீங்க சிவா... அருமை.. தொடரவும்!!!
வாழ்த்துக்களுடன்...
கார்த்திகேயன் (3ஐ!!!)
http://kaaranam1000.blogspot.com
தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி கார்த்தி.