| Posted in பதிவுலகம் | Posted on 12:19 AM
சென்னை பதிவர்கள் சந்திப்பு - 10 ஏப்ரல் 2010.
என்னிடம் வித்தியாசமான ஒரு கெட்ட பழக்கம் உண்டு. இத்தனை மணிக்கு வரவேண்டுமென்றால் 20 - 30 நிமிடத்திற்கு முன்பே அங்கே சென்றுவிடுவேன். அப்படியே ஆனது சென்ற சனிக்கிழமை மாலை,
ஆம், மெரீனா கடற்கரைச் சாலை...
பா.ஜ.க வின் கொடிகளைத் தாங்கி நிறைய வண்டிகள்..ஏதேனும் பொதுக்கூட்டமா அல்லது வாரக்கடைசி என்பதாலா என்று தெரியவில்லை. ஆனால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சென்னையின் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு... அல்லது உக்கிரத்தைத் தணிக்கும் இடமாக... (அட வெய்யில சொல்றேங்க.) இருக்கிறது ஆசியாவின் நீண்ட கடற்க்கரை.
காந்தி சிலை.
மாலை வெய்யிலால் கறுப்பு காந்தி பொன்னிறமாய் மாறிக்கொண்டிருந்தார். ஆனால் அண்ணன் தண்டோரா பளிச்சென்று தெரிந்தார் (சட்டை நிறம்) கூடவே சிவராமன் மற்றும் சிலர்.
ஒருவழியாய் 6 மணியளவில் டோண்டு மற்றும் பாலபாரதி அவர்களின் வருகையால் ஒரு முடிவுக்கு வந்து, இடம் தேடி..ஒரு காதல் ஜோடிகள் ஆக்கிரமித்த தைரியத்தில்,புல்வெளியில் வட்டமிட்டு அமர்ந்தோம்.
நம் சுய அறிமுகத்துடன் ஆரம்பமானது சந்த்திப்பு.
விக்கிப்பீடியாவில் தமிழ் பதிவர்களின் பங்களிப்பு, அதன் அவசியம், நிறை குறைகள்..
தமிழ் காமிக்ஸ்..
எங்கே பிராமணனின் விமர்சனம்..
என நிறைய விவாதித்தாலும், பதிவுலகம் பயமுறுத்தியவாறு இல்லாமல் இனிதே நடந்தது. (இதில் நான், காமேஷ் இருவர் மட்டுமே கன்னிசாமி. ஆமாமா மற்ற எல்லோருமே குருசாமிகள்.)
சாமியேயேயேய் .......
இடையில் புல்வெளியில் அமரக்கூடாது என சில காவலர்கள், கனிவும், கண்டிப்புடனும் கூறியதில், இடம் மாற்றப்பட்டு, சிறு சிறு குழுவாக பிரிய நேர்ந்து.. தொடர்ந்தது.
கேபிள், ஜாக்கி சேகர் போன்றோர் சினிமா கிளைமாக்சில் வரும் போலீஸ் மாதிரி கடைசியில் தரிசனம் தந்தார்கள். நான் கேபிளின் பைக்கிலேயே தொற்றிக்கொண்டு முடிவுரைக்கு (டீக்கடைதான் வேறென்ன) வந்தேன். அப்போதும் நிறைய கிளைமாக்ஸ் போலீஸ் வந்ததால் அவர்களின் பரிச்சயம் தவிர்க்கப்பட்டது உண்மை.
கடைசியில் சுபம்... சுபம்.. சுபம்.
கிளிக்கிய சில..,
(என் கேமரா பாட்டரி தனது சக்தியை இழந்ததில், நிறைய பேர் மிஸ்ஸிங்..) :-(
.
பதிவர் சந்திப்பு பற்றி பதிவிட்டதில் மகிழ்ச்சி நண்பரே...
நன்றி
கிளைமாக்ஸ் போலிஸ் சூப்பரு...
@ Prasanna Rajan
@ வினையூக்கி
@ ஜாக்கி சேகர்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.!
nice, thanks for sharing
தங்கள் கருத்துக்கு நன்றி ராம்ஜி.