சிவப்ரியன்

பேனா விலைபோகலை.

11

| Posted in | Posted on 5:07 PM

பெண்ணியவாத தோழி ஒருத்தி
கவிதை ஒன்று வரைந்தாள்.

விந்து, யோனி, புணர்ச்சி
எந்த வார்த்தைகளுமில்லை.

பெரிய தலைவனின்
"குறி"ப்புகளில்லை.

கடவுள் எவனும்
உடைபடவில்லை.

ஆடவரை இழிவுசெய்யும்,
மடமையுமில்லை.

உச்சகட்ட போதையின்
உளறல்கூட இல்லை.

ஏற்க முடியவில்லை.
நவீன பெண்ணியக் கவிதை.

கருத்தாழத்தோடு இருக்கிறதாம்,
முகம் சுளிக்காமல் படிக்கலாமாம். - என
என்னென்னவோ சொன்னாள்.

ஆனால்,
நவீன பெண்ணியத்தில்,
பாவம் என் தோழியின்,

"பேனா விலைபோகலை".

.

Comments (11)

பெண்ணியவாதம் அப்படின்னா இதுதானா?

இது நவீன பெண்ணியவாதம். இப்பிடித்தான் போல..!

விலை போகாத பேனா அல்ல
விலைமதிப்பற்ற பேனா
உங்கள் தோழியின்
பெண்ணியம்....
பாராட்டுக்கள் சிவபிரியன்.....

அதெல்லாம் உலகின் அழ(ழு)கிய முதல்பெண்ணா இருக்கோணும்....அப்பதான் போனியாகும்...கவித!

"பேனா விலைபோகலை"
ஏனென்றல் அந்த பேனா விற்பனைக்கு அல்ல

"லீனா மணிமேகலை" கவுஜைக்கு,
"பேனா விலைபோகலை" எதிர் கவுஜையா?

நல்லாத்தாய்யா வைக்கிறீங்க பேரு.

உங்க கவிதை பாதிப்பில் நானும் ஒ‌ன்னு நம்ம ஸ்டைல்ல ட்ரை செய்து பார்த்தேன். பேனா வீண் போகலை

http://nvmonline.blogspot.com/2010/04/blog-post_4959.html

நண்பரே... நவீன எழுத்தாளகள் என்று சொல்லிக்கொள்ளும் நம் ஆண்கள் எதை எழுதி தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறார்களோ, அதைத்தான் பெண்களும் செய்கிறார்களோ என்று நினைக்கிறேன்.

அதெல்லாம் உலகின் முதல் அழுகுனி பெண்ணா இருக்கோணும்....அப்பதான் போ(யோ)னியாகும்...கவித

/அதெல்லாம் உலகின் முதல் அழுகுனி பெண்ணா இருக்கோணும்....அப்பதான் போ(யோ)னியாகும்...கவித
//
அடப்போய்யா. நானும் இதைத்தான் எழுத வந்தேன். அதுக்குள்ள்..

@வேலு.ஜி
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்)
வாழ்த்துக்கு நன்றி.

@ மயில்ராவணன்
அப்படி ஆக்கீட்டாங்க.. ஆனா இது ஆவறதில்ல...

@ பிரின்ஸ்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

@ தமிழ்மஞ்சன்
"பூ"வுன்னும் சொல்லலாம், "புய்பம்" னும் சொல்லலாம்.

@வினாயகமுருகன்
அம்முக்குட்டி சூப்பர். (உண்மையிலேயே கவிதையின் பாதிப்புதானா?)

@Discovery Book palace
ஆபாசத்தில்... ஆணென்ன, பெண்ணென்ன எல்லாம் ஓரினம்தான்.

@ மணிஜீ
ஆமாங்க.. பெண்ணுக்கு முதல் எதிரி பெண்தான் என்பதை., நம்ம பெண்ணியவாதிகள் புரிந்துகொண்டால் சரி.

@ Cable சங்கர்
SAME blood. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தல.

கருத்துரையிடுக