| Posted in கவிதை | Posted on 12:56 AM
உறவுகளற்றவன் -ஆனால்
அனாதையில்லை.
அரசியல் பேசுவான் -ஆனால்
வாக்காளனில்லை.
எல்லாம் தெரிந்தவன் -ஆனால்
ஞானியில்லை.
மதுவிலக்கு பேசுவான் -ஆனால்
மதுவின்றி உறங்காதவன்.
கலாச்சாரம் கூட சொல்வான் -ஆனால்
சாரமற்றவன்.
கிரிக்கெட்டும், சினிமாவும்
சமூகமென்பான்.
குடும்பம்,காதல்,நட்பு -எல்லாம்
வியாபாரமாய்ப் பார்ப்பவன்.
அவன் யார்?
அவன் யார்?
அவன் யாரென,
தேடுபொறியை முடுக்குகிறாயா?
என் அருமை
கணிப்பொறி வல்லுனனே!
.
me too..
ஏன் இந்த கொலைவெறி?