| Posted in கவிதை , பிரசுரமானவை | Posted on 7:36 PM
ரோட்டோரமாய் பல முறை
ரோஜாச்செடிகள் வாங்கியதுண்டு.
ஆனால்,
எப்போதும் என் வீட்டு செடிகள்
கருத்தரிக்கும் முன்பே
மரித்துவிடும்!
எப்போதும் சண்டையிடும் உன் கோப விழிகள்
எப்போதாவது மன்னிப்பு கேட்கும் நாள் போல,
ஒருநாள் அதிகாலை - அது
அரிதாய் பூப்படைந்தபோது,
அன்று முழுவதும்
பண்டிகை தினமானது எனக்கு.
ஆம்
என் வீட்டு பூக்களுக்கும்,
உனக்கும் சம்பந்தம் இருக்கிறது!
நன்றி : வார்ப்பு
(இது வார்ப்புவில் வெளியான எனது படைப்பு.)
Comments (0)
கருத்துரையிடுக